நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ள மாணவி ஆசிபாவை அவருடைய இல்லத்தில் நேற்று எஸ்டிபிஐ கட்சியினர் நேரில் சந்தித்து கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சி நெல்லை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில், தொகுதி செயலாளர் பயாஸ், டவுன் பகுதி செயலாளர் காதர், டவுன் கிளை தலைவர் திவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.