பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

மதுரை அருகே நேற்று ஸ்கேட்டிங் பிரிவின் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;

Update: 2025-08-02 06:12 GMT
20வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 22 முதல் 30 வரை தென் கொரியா நாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்த புகழ்பெற்ற சாம்பியன்ஷிப்பில், மதுரை அலெக்ஸ் ஸ்கேட்டிங் அகாடமியைச் சேர்ந்த ரேஷ்மா ஸ்ரீ, யோகிதா, ஹீரா மற்றும் விஷால் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று, தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா, தமிழ்நாடு மற்றும் மதுரைக்கு பெருமை சேர்த்தனர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இந்த மாணவர்களை பாராட்டும் வகையில், நேற்று (ஆக.1) மாலை மதுரை அம்பிகை நாராயணன் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்சில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அவர்கள் மாணவர்களை நேரில் கௌரவித்து பாராட்டினார். முன்னதாக பதக்கம் வென்ற மாணவர்களை அலெக்ஸ் ஸ்கேட்டிங் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் கடச்சனேந்தல் பகுதியிலிருந்து ஸ்கேட்டிங் செய்து பேரணியாக அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News