முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களின் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களின் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்..*;
விருதுநகரில் முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களின் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, விருதுநகர் அருகே சத்திரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம்,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவுநோய் மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளன. மேலும், இம்முகாமில் பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.