நெய்வேலி: பெண் தலைமை காவலர் பதக்கம் வென்று சாதனை
நெய்வேலி பெண் தலைமை காவலர் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.;
தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வடக்கு மண்டலம் பெண்கள் அணியின் சார்பாக கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர காவல் நிலைய பெண் தலைமை காவலர் ராஜேஸ்வரி பிஸ்டல் பிரிவில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். இதனை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.