கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரு சில இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 2) காலை 8.30 மணி நிலவரப்படி வானமாதேவி பகுதியில் அதிகபட்சமாக 113 மில்லி மீட்டர், லால்பேட்டை 84 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடியிருப்பு 80 மில்லி மீட்டர், கடலூர் 73.8 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 70 மில்லி மீட்டர், பண்ருட்டி 68 மில்லி மீட்டர், வடக்குத்துறை 55 மில்லி மீட்டர், வேப்பூர் 51 மில்லி மீட்டர், விருத்தாசலம் 8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.