சிதம்பரத்தில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்
சிதம்பரத்தில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.;
சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், பாரதிய ஜெயின் சங்கட்டனா, சென்டிரல் ரோட்டரி சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனை மற்றும் மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் நினைவாக சிதம்பரம் கமல்தீப் நிறுவனத்தார் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (ஆகஸ்ட் 3) சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.