அழகுக் கலை துறையில் முதல் முறையாக உலக சாதனை முயற்சி
திண்டுக்கல் கிறிஸ்துவ வன்னியர் மஹாலில் அழகுக் கலை துறையில் முதல் முறையாக உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது;
திண்டுக்கல் கிறிஸ்துவ வன்னியர் மஹாலில் இன்று அழகுக் கலை துறையில் முதல் முறையாக உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. ஐ கேன் பியூட்டி டென்ட் சார்பில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில், அதில் மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனிஉள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் , பெண்கள் என 150 க்கும் மேற்பட்ட அழகு கலை நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில் 15 நிமிடத்தில் புருவம் ஒதுக்குதல், யு வடிவ சிகை அலங்காரங்கள் செய்து காண்பித்தனர். நடுவர்களாக வேர்ல்டு வொண்டர்ஸ் சாதனை புத்தகத்தின் சேர்மன் மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு செய்தனர். இதில் 10 நிமிடங்களில் அழகுக் கலையில் சாதனையை முறியடித்த 15 நிபுணர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் வேர்ல்டு வொண்டர்ஸ் சாதனை புத்தகத்தில் இவர்கள் பெயர் இடம்பெற்றது. இந்நிலையில் சிறப்பு விருந்தினராக மெர்சி பவுண்டேஷன் நிறுவனர் மெர்சி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.