கோவை: சிறுபான்மையினருக்கான உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக அமைதி பேரணி !
சட்டீஸ்கர் மாநிலத்தில் மதமாற்றம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் வந்தனா ஃபிரான்சிஸ் மற்றும் பிரீத்தி மேரிக்கு ஆதரவாக, கோவையில் அமைதி பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.;
சட்டீஸ்கர் மாநிலத்தில் மதமாற்றம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் வந்தனா ஃபிரான்சிஸ் மற்றும் பிரீத்தி மேரிக்கு ஆதரவாக, கோவையில் அமைதி பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜெ. அருணின் தலைமையில், கோவை மறை மாவட்ட துறவிகள் பேரவை சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய ஜெ. அருண், பா.ஜ.க ஆட்சி மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மதவாத அரசியலின் பெயரில், சிறுபான்மையினரின் சட்ட உரிமைகள், பாதுகாப்புகள் பறிக்கப்படுவதை கடுமையாக விமர்சித்த அவர், கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளை விடுவிக்க வேண்டியது மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.