அழகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
மதுரை அழகர் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.;
மதுரை அழகர் கோயில் மலை மேல் உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் இன்று (ஆக.3) ஆடிப்பெருக்கு முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தீர்த்தமாடி ராக்காயி அம்மன், பழமுதிர்சோலையில் உள்ள முருகப்பெருமான், மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகரை தரிசனம் செய்து சென்றனர். இன்று அழகர் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.