கோவை: மாநகராட்சி ஆணையாளர் குடிநீர் திட்டங்களை ஆய்வு செய்தார் !

கோவை மாநகராட்சிக்கு பில்லூர்-1, பில்லூர்-2, பில்லூர்-3, சிறுவாணி, ஆழியாறு, பவானி ஆகிய 6 குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.;

Update: 2025-08-03 12:40 GMT
கோவை மாநகராட்சிக்கு பில்லூர்-1, பில்லூர்-2, பில்லூர்-3, சிறுவாணி, ஆழியாறு, பவானி ஆகிய 6 குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. பவானி ஆற்றில் அமைந்துள்ள பில்லூர்-3 திட்டத்தின் கீழ் சமயபுரம் அருகே உள்ள தடுப்பணையில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு, கட்டன்மலையில் சுத்திகரிக்கப்பட்ட நீர், பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், வளர்மதிநகரில் உள்ள முதன்மை நீர்த்தேக்க தொட்டியைச் சேர்ந்த மேல்நிலை தொட்டிகளை ஆய்வு செய்தார். அப்போது, 42 மேல்நிலை தொட்டிகளில் முறையான நீர் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Similar News