ஆடிப்பெருக்கு: பேரூரில் புனித நீராட வந்த பக்தர்கள் கூட்டம்!

ஆடி 18 சிறப்பு: பேரூரில் கலாச்சார வழிபாடுகளுடன் பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர்.;

Update: 2025-08-04 04:55 GMT
ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) கோவை பேரூர் நொய்யல் ஆற்றுப் படித்துறையில், இறந்த குழந்தைகள் மற்றும் கல்யாணமாகாத பெண்களுக்கு இலைப்படையல் வைத்து சப்த கன்னிமார்களுக்கு வழிபாடு செய்யும் நிகழ்வில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். புனித நீராடி பின், பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் யாசகர்களுக்கும் பசுமாடுகளுக்கும் உணவளித்தனர். நீர் நிலைகளில் உணவுப் பொருட்கள் வீணாவதற்காக தன்னார்வலர்கள் அவற்றை சேகரித்து ஆதரவற்றோருக்கு வழங்கினர். புதுமண தம்பதிகள் தாலி மாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. மக்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Similar News