ஆடிப்பெருக்கையொட்டி செஞ்சேரி மலை கோவிலில் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு !
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுவாக இந்த நாளில் சுவாமியை தரிசித்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன், இன்று காலை முதல் புதுமண தம்பதிகள் மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள் பெருமளவில் சிறப்பு வழிபாடு செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை நேரத்தில், வேலாயுத சுவாமி தேரில் எழுந்தருளும் தேர்பவனியும் நடைபெற்றது.