சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது லாரி மோதியதில் பலி

மதுரை கொட்டாம்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது லாரி மோதியதில் பலியானார்.;

Update: 2025-08-04 10:44 GMT
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை சேர்ந்த அய்யாவு(75) என்பவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டமங்கலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயற்சித்த போது மதுரை விளாச்சேரியை சேர்ந்த அக்பர் (52) என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அய்யாவை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆக.3) மதியம் உயிரிழந்தார் இதுகுறித்து அவரது மகன் சின்ன கருப்பன் கொட்டாம்பட்டி கவுண்டனத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் படித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News