இலவச வேட்டி-சேலை கையிருப்பு அதிகம்: ஆர்டர் குறையும் என நெசவாளர்கள் கவலை !

கடந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட 1.5 கோடி வேட்டி-சேலைகளில் பல இலட்சம் துணிகள் வினியோகம் ஆகாமல் இருப்பதால் நெசவாளர்கள் கவலை.;

Update: 2025-08-04 14:23 GMT
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்படி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நெசவாளர்கள் இந்த துணிகளை தயாரித்து வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட 1.5 கோடி வேட்டி-சேலைகளில் பல இலட்சம் துணிகள் வினியோகம் ஆகாமல் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது 23.2 லட்சம் சேலை, 19.6 லட்சம் வேட்டிகள் நெசவாளர்களிடம் உள்ளன. கூட்டுறவு சங்கங்களிலும் கூடுதல் கையிருப்புகள் உள்ளன. இதனால், 2026ம் ஆண்டு பொங்கலுக்கான புதிய ஆர்டர்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலை தொடருமாயின் நூல் விநியோகம், துணி மடிப்பு உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடும் பெண்கள் வேலை இழக்கும் அபாயமும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். வினியோகம் குறையாமல் இருக்க, உண்மையான தேவை அடிப்படையில் அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News