பிஹார் வாக்காளர்கள் குறித்து ப.சிதம்பரம் சொல்வது கதை - தமிழிசை சாடல்
6.5 லட்சம் பிஹார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.;
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது, 6.5 லட்சம் பிஹார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை சிதம்பரம் சொல்கிறார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரியங்கா காந்தி அங்கிருந்து வந்து வயநாட்டில் போட்டியிடும் போது, வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஒட்டு போட முடியாதா என்ன? 2026 சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியின் தோல்வி தெரிவதால் சிதம்பரம் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் இப்போதே கதை சொல்ல தொடங்கி விட்டனர் என்று தமிழிசை கூறினார்.