கோவை: கோவை குற்றாலம் சுற்றுலா இடம் மூடல் – வனத்துறையின் அறிவிப்பு
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் இன்று தற்காலிகமாக கோவை குற்றாலம் மூடப்படுகிறது.;
கோவை மாவட்டத்தில் இன்று (05.08.2025) மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி மற்றும் வனச்சரக அலுவலரின் ஆலோசனையின் பேரில், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இடம் இன்று மூடப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இதில் முழுமையாக ஒத்துழைக்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வானிலை சீரானபின்னர், சுற்றுலா பகுதிகள் மீண்டும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.