திருப்பரங்குன்றத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை திருப்பரங்குன்றத்தில் முதியவர் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;
மதுரை திருப்பரங்குன்றம் முனியாண்டி முதல் தெருவை சேர்ந்த ஜெயராஜ் (64) என்பவர் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து வந்ததால் இது தொடர்பாக காவல் நிலையம் சென்று அவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த ஜெயராஜ் வீட்டில் நேற்று (ஆக.4)மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.