மாடியிலிருந்து கீழே விழுந்த எலக்ட்ரீசியன் பலி
மதுரை உசிலம்பட்டி அருகே மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி வாத்தியார் தோட்டத்தில் வசிக்கும் பாண்டியின் மகன் ராகவேந்திரன்( 47) என்பவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார் . இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மேக்கிழார்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் மாடியில் கேபிள் டிவி வயரை சரி செய்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார் . உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று( ஆக.4) காலை உயிரிழந்தார்.இது குறித்து அவரது மனைவி முத்து புவனேஸ்வரி உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.