இலவச வீட்டு மனை பட்டா கேட்டும், மனு கொடுத்தும் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு மெய்க்காவல்புத்தூர்  மக்கள் ஒப்பாரி போராட்டம்.

ஜெயங்கொண்டம் அருகே மெய்க்காவல்புத்தூர் கிராமம் காமராஜர் நகர் பகுதி மக்களள் கடந்த 50 ஆண்டாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டும், மனு கொடுத்தும் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு பகுதி மக்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-08-05 15:29 GMT
அரியலூர், ஆக.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள மெய்க்காவல்புத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 50 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் மெய்காவல்புத்தூர் காமராஜர் நகர் கிளைத் தலைவர் ஆனந்தஜோதி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பாரி போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். போராட்டத்திற்கு தமிழ் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கந்தசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். போராட்டத்திற்கு மெய்க்காவல் புத்தூர் காமராஜர் நகர் கிளை செயலாளர் செல்வகுமாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.தியாகராஜன், ஆர்.ரவீந்திரன், எஸ் குமார், பி.பத்மாவதி, ஆர்.கோவிந்தராஜ், எ.சேகர் மற்றும் கிராம மக்களான செந்தில்ராஜன், செந்தில், வீரமணி, மகாலட்சுமி, விஜயலட்சுமி, சுப்புலட்சுமி , இளவரசி, அபிராமி, விஜயகுமாரி, சுபாஷினி, கீதா, ஜான்சிராணி, மகாலட்சுமி, லட்சுமி, வனிதா, தமிழரசி, ஜெயந்தி, தனலட்சுமி, காயத்ரி, ஆர்த்தி, தேவகி, உதயசங்கர், ஜெயந்தி, சிவரஞ்சனி, மாணிக்கம், திலகம், காசியம்மாள், பூங்கொடி, நளாயினி, ராசாத்தி, தனம், பூங்கொடி, லதா, கோமதி, மல்லிகா, கசந்ததேவி, ராசாமணி, அரும்பு, சீதாலட்சுமி, முல்லைக்கொடி, சுமதி, வாசுகி, வள்ளி உள்ளிட்ட  ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு  ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர் நகர் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்,  தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனைக்கு பட்டா வழங்க மனு அளித்த பயனாளிகளுக்கு பட்டா வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர் ஒப்பாரி  போராட்டம் அதிகாரிகள் செவி சாய்க்கும் வரை நடத்துவோம் எனக்கூறி தொடர்ந்து நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீசார் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு  ஜெயங்கொண்டம் மண்டல துணை வட்டாட்சியர் கனகராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி  உள்ளிட்ட அதிகாரிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் அவர்கள், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் மற்றும் மெய்காவல்புத்தூர் காமராஜர் நகர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மக்கள் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் ஒப்பாரி போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து தமிழ் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் கூறும்போது :- தற்காலிகமாக மட்டுமே இந்த ஒப்பாரி போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மெய்காவல்புத்தூர் காமராஜர் நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க மறுக்கப்படும் நிலையில் மிகப்பெரிய அளவில் மீண்டும் போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளார்.முடிவில் மாவட்ட குழு உறுப்பினர்கள் இ மைதீன்ஷா நன்றி கூறினார்.

Similar News