திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரிக்கை

தமுஎகச கிளை மாநாடு;

Update: 2025-08-05 16:29 GMT
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருக்காட்டுப்பள்ளி கிளை 14-ஆவது மாநாடு, ஞாயிற்றுக்கிழமை மாலை, மாலா மஹாலில் கிளைத் தலைவர் பி.ஆயிராசு தலைமையில் நடைபெற்றது.   மாநாட்டை மாவட்ட துணைத் தலைவர் சத்தியநாதன் துவக்கி வைத்தார். பாரதி  வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை  பி.தாமரைச்செல்வன் வாசித்தார். இந்நிகழ்வில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.செந்தில் குமார், முதுகலை பட்டதாரி ஆசிரியர் இர.பேகன், கலியபெருமாள், கு.இலக்கியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  கிளைச்செயலாளர்  (பொ) எம்.கருணாகரன் செயலர் அறிக்கையை தாக்கல் செய்தார். கவிஞர் அருணா ராஜேந்திரன், புலவர் சாமி அரங்கராசன் ஆகியோர் கவிதை வாசித்தார்கள். சங்க மாவட்ட செயலாளர் இரா.விஜயகுமார் மாநாட்டில் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரையாற்றினார்.  புதிய கிளை தலைவராக பிஆயிராசு, செயலாளராக வழக்கறிஞர் எம்.கே.சேகர், பொருளாளராக எம்.கருணாகரன் மற்றும் 25 பேர் கொண்ட புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். நிறைவாக புதிய கிளை செயலாளர் சேகர் நன்றி தெரிவித்தார். மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, திருக்காட்டுப்பள்ளியில் புதிய நூலகம் கட்ட ஒதுக்கிய இடத்தில் உடனே புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பூதலூர் தாலுக்காவிற்கு சார் கருவூலம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும். திருக்காட்டுப்பள்ளி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக புறவழிச் சாலை அமைக்க வேண்டும். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி சிறப்பு உயிர்  காக்கும் மருத்துவமனையாக்க வேண்டும். மேலும் நவீன வசதிகளுடன் புதிய பிரேத பரிசோதனைக் கூடம் கட்டி தர வேண்டும். மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி பெற திருக்காட்டுப்பள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும்"  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News