குருவிக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா
தாய்ப்பால் வார விழா ச;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், லயன்ஸ் சங்கம் சார்பில், தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. லயன்ஸ் சங்கத் தலைவர் கே.கே.டி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். டாக்டர் அஸ்வினி தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து, கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விளக்கம் அளித்து பேசினார். அவர் பேசுகையில், தாய்ப்பால் என்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது. மேலும், தாய்க்கு மார்பக புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிகள் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கின்றன. தாய்ப்பாலில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது, இது குழந்தையின் செரிமான அமைப்பிற்கு ஏற்றது. தாய்ப்பால் கொடுக்கும் செயல், குழந்தையின் தாயுடன் ஒரு வலுவான உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது" என்றார். நிகழ்ச்சியில், 15 தாய்மார்களுக்கு பழங்கள், பேரீச்சம்பழம், பயறு வகைகள் அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் எஸ்.கே.ராமமூர்த்தி, வைரவன், வி.எம்.தமிழ்செல்வன், சந்திரமோகன், ஆர்.பி.ராஜேந்திரன், இளையராஜா, கோபால், செந்தில்குமார், ரகுபதி, செயலர் மனோகரன், பொருளர் ஜி.ராஜா, செவிலியர்கள், தாய்மார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.