மனம் வளர்ச்சி குன்றிய நபர் தற்கொலை.
மதுரை அருகே மன வளர்ச்சிக்கு குன்றிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரில் வசிக்கும் கல்யாணசுந்தரத்தின் மகன் சிவராஜன்( 40) என்பவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மன வளர்ச்சி இல்லாதவர். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக.4) மாலை 4 மணி அளவில் வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். அவரை அங்குள்ளவர்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் விஜயலட்சுமி சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்