ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் நால்வர் கைது

மதுரை கள்ளந்திரி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-08-06 10:14 GMT
மதுரை அழகர் கோயில் அருகே உள்ள கள்ளந்திரியில் கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு வீட்டிலிருந்த ஆட்டோ டிரைவர் செல்லப்பாண்டியை சிலர் ‘வா மீட் பண்ணலாம்’ என வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பி அழைத்துள்ளனர். இதனால் அழகர்கோயில் சாலை பகுதிக்கு சென்ற செல்லபாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியது. இது குறித்து அப்பன்திருப்பதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ்தலைமறைவான கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கொலையில் ஈடுபட்ட தொப்பலாம்பட்டியை சேர்ந்த கோகுல்ராஜ்(21), டி.மேட்டுப்பட்டி நித்தீஸ்வரன்(20), கோணப்பட்டி ஆகாஷ்(20) மற்றும் கம்மாபட்டி வெற்றிவேல்(23) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Similar News