ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பத்தாவது ஒன்றிய மாநாடு புதிய நிர்வாகிகள் தேர்வு.

ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பத்தாவது ஒன்றிய மாநாடு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2025-08-06 12:04 GMT
அரியலூர், ஆக.6- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பத்தாவது ஒன்றிய மாநாடு ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் லீலாவதி அரங்கத்தில் ஒன்றிய தலைவர் மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய செயலாளர் பல்கீஸ் செங்கொடியேற்றி வைத்தார். பிஅமுதா அஞ்சலி உரை நிகழ்த்தினார். முன்னதாக ஆர்.தனம் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர் பி.சிவசங்கரி வேலை அறிக்கையினை வாசித்தார். மாநாட்டில் 10 நபர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.பத்மாவதி நிறைவுறையாற்றினார். செயலாளர் பி.சிவசங்கரி தொகுப்புரையாற்றினார். மாநாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் 100 நாள் வேலை வழங்கிடவும்,100 நாள் வேலையை நகர்புறத்திற்கும் விரிவுப்படுத்தவும்,100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி கூலி 600 வழங்க வேண்டும் எனவும், மனு கொடுத்த அனைத்து பகுதி ஏழை எளிய மக்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், நீர்நிலை புறம்போக்கு என்று கூறி நீதிமன்ற உத்தரவின் பேரில் புல்டோசர் மூலம் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிப்பதை கைவிட வேண்டும், கொல்லாபுரத்தில் மேலத்தெருவில் மின் கம்பம் பழுதடைந்து மக்களுக்கு இடையூறாக உள்ள நிலையில் அதனை உடனடியாக சீரமைத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் ஒன்றிய தலைவராக ஆர்.ரோஸ்வள்ளியும், செயலாளராக பி.சிவசங்கரியும், பொருளாளராக டி.மீனாட்சியும், துணைத் தலைவராக பி.அமுதாவும், துணை செயலாளராக டி.சங்கீதா உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் இடை கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் பி. அமுதா நன்றி கூறினார்.

Similar News