ஆபத்தான மின்கம்பம் சரி செய்யப்படுமா?
மதுரை சோழவந்தானில் உள்ள ஆபத்தான மின்கம்பம் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
மதுரை மாவட்டம் மன்னாடிமங்கலம் ஊராட்சி நடுத்தெருவில் மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் நடுத்தெரு பகுதியில் சாய்ந்த நிலையில் பல மாதங்களாக மின்கம்பம் உள்ளதாகவும் பலமுறை மின்வாரிய பணியாளர்களிடம் கூறியும் மின்கம்பத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலங்களில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.