சிவன் கோவிலில் வளர்பிறை பிரதோஷ வழிபாடு
பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில் சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.;
சிவன் கோவிலில் வளர்பிறை பிரதோஷ வழிபாடு பெரம்பலூரில் ஆடி மாதம் வளர்பிறை பிரதோஷ தினமான இன்று (ஆகஸ்ட் 6) பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில் சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.