மயானம் அருகே சாக்கடையில் ஆண் சடலம் மீட்பு.
மதுரை தனக்கன்குளம் மயான அருகே உள்ள சாக்கடைக்கால்வாயில் ஆண் பிரேதத்தை போலீசார் மீட்டனர்.;
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் மயானம் அருகே இருக்கும் சாக்கடையில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக இன்று ( ஆக.7) காலை தகவல் வந்ததையடுத்து திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கடையில் இருந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வேடர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் பால் கண்ணன் (37)என தெரியவந்தது .இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது. திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.