ஜெயங்கொண்டம் கிளை சிறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலையில் சுற்றுச்சூழல் இடிந்து விழுந்து சேதமாயின 17 கைதிகள் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.;
அரியலூர், ஆக7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள கிளை சிறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர் இந்நிலையில் சிறைச்சாலையின் 30 அடி நீளம் உள்ள 24 அடி உயரமுள்ள சுற்றுச் சவர் திடீரென இடிந்து விழுந்தது இதில் சிறையில் இருந்த கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை இந்நிலையில் சிறையில் இருந்த கைதிகள் 17 பேர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்