தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்கொல்லை வள்ளி திருமண மண்டபத்தில், முடச்சிக்காடு, ஊமத்தநாடு, கழனிவாசல் ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். இதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், தாட்கோ மேலாளர் தியாகராஜன், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேலு, திமுக ஒன்றிய செயலாளர் வை ரவிச்சந்திரன் மூக்கி முத்துமாணிக்கம், வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கவிதா மற்றும் முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆர்.மனோகரன் வரவேற்றார். நிறைவாக. வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சோ.நாகேந்திரன் நன்றி கூறினார். இம்முகாமில், பயனாளிகள் 9 பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.