பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் சாலை அகலப்படுத்தும் பணி அலுவலர்கள் ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட கோட்டாகுடியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மன்னார்குடி -சேதுபாவாசத்திரம் (எஸ் .எச் -146) மாநில சாலையினை பரப்பு அடிப்படையில் ஒருங்கிணைந்த சாலை மேம்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையினை இருவழித்தடத்திலிருந்து பல வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படுகிறது. சாலை மேம்பாட்டுப் பணியினை தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உதவிக் கோட்டப் பொறியாளர் ரேணுகோபால், பேராவூரணி உதவி கோட்டப்பொறியாளர் விஜயகுமார் மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறையைச் சேர்ந்த உதவிப்பொறியாளர் விமல் குமார், பேராவூரணி உதவிப்பொறியாளர் திருச்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர் . அதிக போக்குவரத்து புழக்கம் உள்ள இந்த சாலை அகலப்படுத்துவதால் கிழக்கு கடற்கரை பகுதிக்கும், பட்டுக்கோட்டை பகுதிக்கும் விரைவாக சென்றுவர வசதி ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தமிழ்நாடு அரசுக்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.