மனநலம் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் பகுதியில் சுற்றித் திரிந்த நபரை மீட்பு

மனநல மருத்துவர் அசோக் அவர்களால் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 07.08.2025 -ம் தேதி மேற்படி நபரை அவரின் தாயார் ரெஜியாபேகம் ஷேக் அப்துல்லா,;

Update: 2025-08-07 16:34 GMT
மனநலம் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் பகுதியில் சுற்றித் திரிந்த நபரை மீட்டனர். பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த இர்ஃபான் பாஷா 26/25* என்ற நபரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து,கடந்த 07.07.2025 அன்று மேற்படி நபரை பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா அவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் மேற்படி நபரை மனநல மருத்துவர் அசோக் அவர்களால் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 07.08.2025 -ம் தேதி மேற்படி நபரை அவரின் தாயார் ரெஜியாபேகம் ஷேக் அப்துல்லா, சக்கரப்பள்ளி, பாபநாசம், தஞ்சாவூர் அவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மார்கிரேட் மேரி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மனநல மருத்துவர் அசோக் ஆகியோர்களால் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டார். இச்செய்தியறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மேற்படி நபரை நல்லமுறையில் உறவினரிடம் ஒப்படைக்க உதவிய அனைவரையும் வெகுவாக பாராட்டினார்கள்.

Similar News