போதைப்பொருளுக்கு எதிரான மாணவர்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
ஜெயங்கொண்டம்.ஆக.9- ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேண்டாம் போதைப்பொருள் என்பதை வலியுறுத்தி NO DRUGS எனும் ஆங்கில எழுத்து வடிவில் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டு நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சமுதாயத்தில் நிலவும் போதைப்பொருள் கலாச்சாரத்தை வேறோடு அகற்றும் விதமாக மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்த்து. கல்லூரி முதல்வர்(மு.கூ.பொ) முனைவர் இராசமூர்த்தி தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அன்பரசன் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலகு-1 ஒருங்கிணைபாளர் முனைவர் வடிவேலன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.