ஜெயங்கொண்டம் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

ஜெயங்கொண்டம் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2025-08-08 15:45 GMT
அரியலூர், ஆக.8- ஜெயங்கொண்டம் - தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வாரியங்காவல் கிராமத்தில்   கைத்தறித்துறை கும்பகோணம் சரகம் சார்பில் 11-வது தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், கைத்தறித்துறை கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கைத்தறித்துறை உதவி இயக்குனர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 13 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை ஆணைகள் வழங்கப்பட்டது, முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 16,00,000 ரூபாய் காண ஆணைகள் 32 நபர்களுக்கு வழங்கப்பட்டது, மேலும் தமிழக அரசு கைத்தறி துறை ஆதரவு திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு 76,000 மதிப்பில் அச்சு பண்ணைக்கான பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கு உட்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News