ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி காளியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை.*
ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி காளியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.;
அரியலூர், ஆக.8 - ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜையில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்தனர் . அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த குத்து விளக்கு பூஜையில் குடும்பம் நலம் பெற வேண்டியும், தொழில் அபிவிருத்தி வேண்டியும், மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் காரைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.