ஜெயங்கொண்டம் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கழுமலைநாதர் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜைகள்

ஜெயங்கொண்டம் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கழுமலைநாதர் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.;

Update: 2025-08-08 16:26 GMT
அரியலூர். 8- ஆடி மாத ஸ்ரீ துர்க்கை அம்மன் மஹாயாஹ பால்குட குத்துவிளக்கு மஹா பூஜை நேற்று நடைபெற்றது.ஆடி மாத பௌர்ணமி திதி வெள்ளிக்கிழமை வரலெக்ஷ்மிவிரதம் திருவோணம் நட்சத்திரம் இவை ஐந்தும் ஒன்று சேர அமைவது மிகமிக அறிது. இந்த நன்னாளில் நாம் துர்க்கை அம்பிகைக்கு காலை (10.00)மணிக்கு மஹா யாகமும் பால்குட அபிஷேகமும்,மாலை (5.30)க்கு குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். மக்கள் நோய் பிணையின்றி சுகாதாரமாகவும் வளமுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டியும், விவசாயம் செழிக்கவும், திருவிளக்கு பூஜை செய்தனர். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் சிவநேய செல்வன், ஆய்வர் கேசவன், திருக்கோயில் கணக்கர் கந்தவேல் நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

Similar News