தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழுகூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழுகூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-08-08 16:30 GMT
அரியலூர் ஆக.8- தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்டக்குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. பல்கீஸ் வீட்டில் மாவட்ட துணை தலைவர் வரப்பிரசாதம் தலைமை வகித்தார். இதில் மாநில துணை செயலாளர் .துரைராஜ், மாவட்ட செயலாளர் மணிவேல், மற்றும் தியாகராஜன், மகேந்திரன், தனவேல், பாலசுப்பிரமணியன், இளவரசன், பெரியசாமி, ஜெயரோம், வேம்பு, , கந்தசாமி அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தீக்கதிர் ஆண்டு சந்தா அறிவழகன் மாநில துணை செயலாளரிடம் கொடுத்தார். மேலும் ஆகஸ்ட் 14 நில உரிமை மாநாட்டில் 2 பெண்கள் உட்பட 10 பேர் கலந்து கொள்வது, மாநாட்டை விளக்கி ஒரு கமிட்டிக்கு குறைந்தது ஒரு தட்டி வைப்பது. தீக்கதிர் 550 சிறப்பு விற்பனை செய்வது. ஆகஸ்ட் இறுதிக்குள் கிளை மாநாடுகள் நடத்துவது. கியூபா ஆதரவு நிதி ஆகஸ்ட் 13க்குள் கொடுப்பது, என முடிவு செய்யப்பட்டது.பல்கீஸ் நன்றி கூறினார்.

Similar News