ஜெயங்கொண்டம் அருகே ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் கல்லாத்தூர் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு

ஜெயங்கொண்டம் அருகே ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் கல்லாத்தூர் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகி வெளியேறி கொள்ளிடம் கூட்டு குடிநீர் சாலையையும் வீணாக்கி வருகிறது.;

Update: 2025-08-08 16:34 GMT
ஜெயங்கொண்டம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் சேதம் அடையும் சாலை ஜெயங்கொண்டம் ஆக.9- ஜெயங்கொண்டம் அருகே குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வீணாவதால் குடிநீர்தட்டுபாடு ஏற்படும் அபாயமும் சுகாதார சீர்கேடும் ஏற்படும். ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், இலையூர் ,வாரியங்காவல்,குவாகம் போன்ற ஊர்களுக்கு குடிநீருக்கு பிரதானமாக விளங்குவது தா.பழுர் ஒன்றியத்தில் உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ப்பட்டு வருகின்றது. கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் மிகபெரிய ஆழ்குழாய் அமைத்து செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் பழைய கொள்ளிடம் கூட்டு குடிநீர்திட்டம் மற்றும் புதியகொள்ளிடம் கூட்டுகுடிநீர்திட்டம் என இரண்டு திட்டத்தில் குடிநீர் அனுப்பி வருகின்றனர். ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு புதிய கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர்விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு மழைகாலங்களில் 8ஆயிரம் முதல் 10ஆயிரம் லிட்டர் அளவில் விநியோகம் செய்யப்பட்டது. கோடைகாலங்களில் நீர்மட்டம் குறைந்ததால் மின்சாரம் ஆழ்குழாய் கிணறு நிரம்ப பம்ப் செய்யப்பட்டு குடிநீர் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. இந்நிலையில் போதியஅளவில் குடிநீர் கோடாலிகருப்பூரிலிருந்து நீர் அனுப்பி வைத்து குடிநீரானது ஜெயங்கொண்டம் அருகே ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. இந்தக் குடிநீர் ஆனது சாலையில் ஓடி தார் சாலையையும் வீணாக்குகிறது . மேலும் வீணாக வெளியேறி தேங்கி நிற்கும் நீரானது மோட்டார் நிறுத்தப்படும் போது மீண்டும் குழாயில் உள்ளே செல்லும் அப்படி செல்லும் நீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று மலேரியா டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயமும் உண்டு. மேலும் அப்படி குழாயில் அனுப்பிவைக்கபடும் குடிநீர் பராமரிப்பு இல்லாததால் குடிநீர்குழாயில் உடைப்பு ஏற்பட்டு வழியிலேயே நீர் வெளியேறி வீணாகின்றது. இதனால் நெடுஞ்சாலைகளில் ஓரமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிகொண்டுள்ளது. இதனை கூட்டுகுடிநீர்திட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை, குடீநீர் வீணாவதை நிறுத்தி இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், பகுதி பொதுமக்களின் குடிநீர்தட்டுபாட்டை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் வீணாவதோடு மட்டுமல்லாமல் இவ்வாறு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும் குடிநீரை ஏற்றுவதற்காக மின்சாரமும் வீணாகி வருகிறது அரசு பல்வேறு வகைகளை மின்சார சிக்கனம் தண்ணீர் சிக்கனம் என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறது இவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் இது போன்ற பராமரிப்பால் மின்சாரம் குடிநீர் என பல்வேறு வகைகளில் விரைய செலவுகள் நடந்து கொண்டு தான் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக போடப்பட்ட இந்த சாலை தற்போது படுகுழி விழுந்து சாலையும் சிறிது சிறிதாக சேதமடைந்து உள்ளது. விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News