பாமக பொதுக் குழுவை நடத்த தடை இல்லை... அறத்துக்கு கிடைத்த வெற்றி! - அன்புமணி

திட்டமிட்டபடி பாமக பொதுக் குழுவை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது , நீதிக்கும் அறத்துக்கும் கிடைத்த வெற்றி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-08-08 18:12 GMT
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (ஆக.9) காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்துக்கும் கிடைத்த வெற்றி. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே என்று பாமகவினருக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News