ஸ்ரீபெத்தநாச்சியம்மன் உடனுறை ஸ்ரீ பொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் கோவில் கும்பிபாபிஷேக அழைப்பிதழ்
12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் கும்பாபிஷேகத்திற்கு 7 புனித நதிகளில் புனிதநீர் எடுக்க 7 பேர் புறப்பட்டு செல்கின்றனர்.;
பெரம்பலூர் ஸ்ரீபெத்தநாச்சியம்மன் உடனுறை ஸ்ரீ பொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் கோவில் கும்பிபாபிஷேக அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக சாலை அபிராமபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபெத்தநாச்சியம்மன் உடனுறை ஸ்ரீ பொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் சுவாமி , ஸ்ரீ கல்லணையான் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா 4.9.2025 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.கும்பாபிஷேகத்திற்கு 7 புனித நதிகளில் புனிதநீர் எடுக்க 7 பேர் புறப்பட்டு செல்கின்றனர். இந்தநிலையில் பெரம்பலூர் சங்குப்பேட்டை பொன்னுசாமி கோவிலில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.காரியஸ்தர்கள் கண்ணபிரான்,சரவணன் ஆகியோர் அழைப்பிதழை வழங்க ,வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.மேலும் அன்னதானமும் நடைபெற்றது. ஸ்ரீ அருள்மிகு பொன்னம்பல சுவாமி கல்லணையமாபுரி ஆலயத்திற்காக காசிக்கு புனித நீர் எடுக்க சிவகுமார் , பால்ராஜ், மகேஷ் குமார், இளையராஜா, மகிழன் , ராகுல், ராஜராஜன் ஆகியோர் புனிதநீர் பயணத்திற்கு தயார் நிலையில் உள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது, கிராம காரியஸ்தர்கள், பூசாரி மார்கள், கல்லனையான் குடிமக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.