காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் ஆணையத்தையும் பாஜகவையும் கண்டித்து திண்டுக்கல்லில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் உட்பட 70 மேற்பட்டோர் பங்கேற்பு;

Update: 2025-08-09 07:13 GMT
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா உட்பட சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பாஜக அரசு மோசடி செய்து வெற்றி பெற்றது. குறித்து காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி ஆதாரத்துடன் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தின் இச்செயலை கண்டித்தும் இதற்கு உடந்தையாக இருந்த பாஜக அரசு கண்டித்தும் திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* இந்த கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் நாகல் நகர் தண்ணீர் தொட்டி அருகே நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தேர்தல் ஆணையத்தையும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Similar News