வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ...*

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ...*;

Update: 2025-08-09 09:54 GMT
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட பீட் 4 சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள வருசநாடு சந்திப்பு மணிக்கட்டி பகுதியில் காட்டுத் தீயானது பரவியது.காட்டுத் தீயினால் பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சேதம் அடைந்து வருகிறது. வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீயினை அணைக்க வத்திராயிருப்பு வனத்துறையினர் மற்றும் சாப்டூர் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் என 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனார்.வனப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத் தீயினை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் பற்றிய தீனை அணைக்கும் முயற்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.மேலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு கோவிலுக்கு சென்றனர். இந்த நிலையில் காட்டு தீயானது பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதைக்கு வந்து விடுமோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாமி தரிசனம் முடித்த பக்தர்களை உடனடியாக கோவிலில் இருந்து அடிவாரப் பகுதிக்கு இறக்கி விட்டனர். இந்த நிலையில் கோவிலுக்கு செல்ல தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி இருப்பதால் வனப்பகுதியில் பற்றிய தீயினை முழுமையாக அனைத்த பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News