டெக்கரேஷன் கடையை உடைத்து திருட்டு
திண்டுக்கல் அருகே செட்டியபட்டி பிரிவில் டெக்கரேஷன் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 ஆம்ப்ளிபயர் திருடிய 2 வாலிபர்கள் கைது;
திண்டுக்கல், தாமரைப்பாடி, கல்லாத்துபட்டியை சேர்ந்த ரூபன்ராஜ்(35) இவர் முள்ளிப்பாடி, செட்டியபட்டி பிரிவு அருகே ஜாய் ஆடியோஸ் மற்றும் டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையை உடைத்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 ஆம்ப்ளிபயர்களை திருடி சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் திண்டுக்கல், வேல்வார்கோட்டையை சேர்ந்த திருப்பதி மகன் மணிபாலன்(20), சங்கர்கணேஷ் மகன் சுபாஷ்சந்திரபோஸ்(20) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஆம்ப்ளிபயர்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.