குடிபோதையில் கால்வாயில் தவறி விழுந்து சலூன் கடைக்காரர் பலி
திண்டுக்கல்லில் குடிபோதையில் கால்வாயில் தவறி விழுந்து சலூன் கடைக்காரர் பலி;
திண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த சண்முகம் மகன் செல்வம்(50) இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை வேடப்பட்டி பகுதியில் அதிகமான குடிபோதையில் தள்ளாடி சென்று கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.