தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்த அமைச்சர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் சின்ன அம்மா செல்லம்மாள் உடல்நலம் குறைவால் தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2025-08-09 13:03 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சின்ன தாயார் செல்லம்மாள் (84) உடல்நலக்குறைவால் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் கே.என்.நேரு - துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., நேரில் சென்று நலம் விசாரித்தனர், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சீ.கதிரவன்,எம்.பிரபாகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் சிறிய தாயார் செல்லம்மாள் என்பவர் சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், அவரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. நேரில் சென்று நலம் விசாரித்தனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் இரா.கிட்டு மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Similar News