இணைய உலகம் மேம்பட்ட சிறப்பியல் மையம் தொடக்க விழா

திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் இணைய உலகம் மேம்பட்ட சிறப்பியல் மையம் தொடக்க விழா நடைபெற்றது;

Update: 2025-08-09 19:41 GMT
திண்டுக்கல் தனியார் (பி எஸ் என் ஏ) பொறியியல் கல்லூரியில் வளர்ச்சி பாதையின் அடுத்த கட்டமாக இன்டர்நெட் ஆப் திங்ஸ் துறையில் மேம்பட்ட சிறப்பியல் மையம் கல்லூரி முதன்மை தலைவர் ரகுராம் தலைமையில் தொடங்கப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஆப் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது இதன் மூலமாக மாணவர்கள் தொழில்நுட்பத்தில் நேரடி செயல்முறை பயிற்சி பெறும் வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் பெங்களூரு சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஆப் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் நிறுவன அறிஞர் ஸ்ரீ கிருஷ்ணா பங்கேற்று பேசுகையில், ஐஓடி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதன் பயன்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். தமிழ்நாடு தொழில் முனைவோர் திட்ட இயக்குனர் சிவராஜா இராமநாதன் மற்றும் சேதுராமன் சாத்தப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாடு மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்திலும், உற்பத்தி திறனில் முதலிடத்திலும் திகழ்கிறது. தமிழ்நாட்டில் 38 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. மாற்றங்களை உள்வாங்கி முன்னேறியுள்ள மாநிலமாக திகழ்கிறது. இந்தியா இண்டஸ்ட்ரி 2.0 இருந்து இண்டஸ்ட்ரி 5.0 ஆக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஐடி மற்றும் கணினி துறையில் ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பழைய படிப்புகளை ஒதுக்கி தள்ளிவிட்டு புதிய நுட்பங்களின் படிப்பினைகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது கால சூழ்நிலை மாறி வருகின்றது அதற்கேற்றார் போல் மாற்றங்களுக்கு தகுந்தவாறு நாமும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சுய நம்பிக்கையுடன் உள்ளுணர்வுடனும் தேடலில் இருந்தால்தான் மாற்றங்களை ஈடுகட்டி முன்னேற முடியும் என மாணவர்களுக்கு மாற்றங்கள் குறித்து விரிவாக பேசினர். கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மாணவ மாணவியர் என பலரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

Similar News