நெல்லைக்கு இன்று (ஆகஸ்ட் 10) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் தலைமையில் துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர்.