கடலூர்: மாபெரும் கண்டன அறப்போராட்டம்
கடலூரில் மாபெரும் கண்டன அறப்போராட்டம் நடைபெற்றது.;
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே தலித் கிறிஸ்தவர்களையும், தலித் முஸ்லிம்களையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பட்டியலின சமூகமாக SC பட்டியலில் சேர்க்கக் கோரி இன்று (ஆகஸ்ட் 10) மாபெரும் கண்டன அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் சமூக நீதிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியது.