நெல்லை மத்திய மாவட்ட திமுக அண்ணா அறிவகத்தை நேற்று இரவு 7 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ் பாரதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றிக்கொண்டான், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.