செந்துறை கிராமத்தில் காணாமல் போன கிணறு, மோட்டார் பம்ப் செட், இ.பி போஸ்ட்

திண்டுக்கல், நத்தம் செந்துறை கிராமத்தில் காணாமல் போன கிணறு, மோட்டார் பம்ப் செட், இ.பி போஸ்ட் ஆகியவற்றை கண்டுபிடித்து தரக் கோரி துரைராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு;

Update: 2025-08-11 11:43 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செந்துறை கிராமம் குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் துரைராஜ். இவர் குரும்பபட்டி கிராமத்தில் பல்வேறு நிலங்களை வாங்கியுள்ளார். ஆனால் அது தற்போது வேறு நபர்களின் பெயரில் முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. புல எண் : 283/2B2 நிலத்தில் இருந்த கிணறு, மோட்டார் பம்ப்செட் மற்றும் இலவச மின்சாரம் ஆகியவை ஆவணத்தில் மட்டுமே உள்ளது. ஆனால் பட்டா எண் பிரச்சனை காரணமாக பல்வேறு நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. செந்துறை கிராமம் முழுவதும் இது போன்ற பட்டா மாறுதல் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்காக, மூன்று ஆண்டுகளாக பல புகார்கள் கொடுத்து பல விசாரணைகள் நடத்தப்பட்டது. ஆனால் இது வரை தீர்வு கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் இன்று (11.08.25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மனு அளிக்க வந்துள்ளேன். மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார்.

Similar News