காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் பழனி சாலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-08-11 12:14 GMT
தேர்தல் ஆணையம் முறைகேடாக வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாகவும், ஒரே வாக்காளர்கள் பலமுறை வாக்களிக்க வாய்ப்பு கொடுத்ததாகவும் தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என்று கூறி ராகுல் காந்தி வெளிப்படுத்தியதை அடுத்து இன்று தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோடு நடை பயணமாக செல்லும் பொழுது அவர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து இன்று திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக துரை மணிகண்டன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திண்டுக்கல் பழனி சாலை வாணி விலாஸ் சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. பின்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியினருடன் சமரசம் பேசி சாலை மறியல் போராட்டமானது கைவிடப்பட்டது.

Similar News